×

விடாமல் தொடரும் கனமழை எதிரொலி.! கன்னியாகுமரி, தஞ்சாவூர், நீலகிரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில், இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக, குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன.


மேலும், தோவாளை பகுதியில் ஓடும் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். Tags : Kanyakumari ,Thanjavur ,Nilagiri ,Tanjavur , Echo of heavy rain that will continue unabated.! Holidays for schools and colleges in districts including Kanyakumari, Thanjavur, Nilgiris and Thanjavur
× RELATED வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை