300 நாளில் 110 கோடி தடுப்பூசி: சுகாதார அமைச்சகம் தகவல்.!

புதுடெல்லி: தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு ேநற்றுடன் 300 நாள் நிறைவான நிலையில் இதுவரை 110 கோடி தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 501 நோயாளிகள் கொரோனாவால் இறந்துள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 12,516 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 13,155 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ெதாற்று பாதித்த 1,37,416 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். ெகாரோனானால் குணமடைந்தோர் விகிதம் 98.26 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 110.74 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்றிரவு 7 மணி வரை 48 லட்சத்திற்கும் அதிகமான (48,76,535) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 300 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 110 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More