ஒரத்தநாடு அருகே காரிமுத்து ஏரி வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகள்-உடனே அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே உள்ள காரிமுத்து ஏரி வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாளமுத்தூர்க்காடு கிராமத்தில் தஞ்சை-பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செல்லும் காரிமுத்து ஏரி வாய்க்காலில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரை மற்றும் புல் புதிர்களை தூய்மைப்படுத்தி தூர்வார வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் தண்ணீர் ஆர்ப்பரித்து அடித்துக்கொண்டு கரைகள் உடைத்து செல்கிறது. இதனால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நடவு செய்துள்ள பயிர்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் அழகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து காரிமுத்து வாய்க்காலில் தூய்மைப்படுத்தி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: