×

தருமபுரி அருகே ரயில் மீது பாறாங்கற்கள் சரிந்ததில் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

தருமபுரி: தருமபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ரயில் இன்று அதிகாலை சேலம் தருமபுரிக்கு இடைப்பட்ட வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் வரும்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து ரயில் தண்டவாளம் அருகில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் மீது பாறாங்கற்கள் மோதியதால் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

ஆனால் 7 பெட்டிகள் தடம் புரண்ட உடனேயே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இது மலை பகுதி என்பதால் ரயில் மெதுவாகவே இயக்கப்படுவது வழக்கம். இதனால் பாறாங்கல் விழுந்த உடனேயே ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 2348 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூரில் இருந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்பதால் சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து மருத்துவ வாகனங்களும் வரவழைக்கப்பட்டது. தற்போது பாதிக்கப்படாத 7 பெட்டிகள் வேறு எஞ்சின் பொருத்தப்பட்டு சேலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 7 பெட்டிகளும் திருப்பத்தூர் வழியாக பெங்களூரு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல முன்பக்கம் இருந்த 3 பெட்டிகள் தருமபுரி அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 9 பெட்டிகள் சம்பவ இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட உள்ளனர். அவர்கள் வந்த உடனேயே இந்த மீட்புப்பணிகளானது தொடர்ந்து நடைபெறும். இந்த விபத்து குறித்து பொதுமக்கள், பயணிகளின் உறவினர்கள் அச்சப்பட வேண்டாம் என்பதற்காக தருமபுரி, சேலம், ஓசூர் பகுதிகளில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Dharamapuri , Train, accident
× RELATED விழுப்புரம், கடலூர் உட்பட 5 மாவட்ட...