×

சீனாவின் சட்டவிரோத குடியிருப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் : இந்தியா திட்டவட்டம்

இட்டாநகர் :இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் சீனா தனது ராணுவ கிராமங்களை நிர்மாணித்து இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார். சீனாவின் ராணுவ கிராமங்கள் குறித்த செயற்கை கோள் படத்தை அண்மையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. திபெத்தில் உள்ள சுயாட்சி மண்டல பகுதி, டிஸாரிச்சு என்ற ஆற்றங்கரை மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் கடந்த ஆண்டு சீனா 100கும் மேற்பட்ட வீடுகளை கட்டியுள்ளதாக அமெரிக்கா கூறி இருந்தது.

இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சட்ட விரோத குடியிருப்புகளை ஒருபோதும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் Arindam Bagchi தெரிவித்துள்ளார். சீன எல்லை அருகே இந்தியாவும் சாலைகள் மற்றும் பாலங்களை கட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே அமெரிக்கா கூறியுள்ள செய்தியில் உண்மை இல்லை என்று முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.சீனா நிர்மாணித்து உள்ள கிராமங்கள் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே அந்த நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் தான் அமைந்துள்ளது என்பது பிபின் ராவத்தின் விளக்கம் ஆகும். 


Tags : China ,India , இந்திய முப்படை ,தளபதி, பிபின் ராவத்
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...