டபிள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ்: கரோலினா, அனெட் அசத்தல் வெற்றி

குவாதலஜாரா: மெக்சிகோவில் நடக்கும் டபிள்யூடி பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில்  கரோலினா பிளிஸ்கோவா, அனெட் கோன்டவெயிட் ஆகியோர்  வெற்றிப் பெற்றுள்ளனர்.  உலக தர வரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும்  டபிள்யூடிஏ பைனல்ஸ் மகளிர் டென்னிஸ் போட்டி மெக்சிகோவின்   குவாதலஜாராவில் நடக்கிறது.  ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் ரவுண்டு ராபின் முறையில் நடக்கின்றன. இந்திய நேரப்படி நேற்று தொடங்கிய முதல் ஆட்டத்தில்  தியோதிஹூகான் பிரிவில் உள்ள  செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா(3வது ரேங்க்),  ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா(6வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.  

முதல் செட்டை 39 நிமிடங்களில் முகுருசா 6-4 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து 2வது செட்டில் சுதாரித்துக் கெண்ட கரோலினா 32நிமிடங்களில் 6-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை தனதாக்கினார். ஆனால் யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்யும் 3 செட்டில் இருவரும் சமபலத்தை காட்டியதால், அந்த செட்  டைபிரேக்கர் வரை நீண்டது.  சுமார் 75நிமிடங்கள் நீண்ட 3வது செட்டை கரோலினா 7-6 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.  அதனால் 2மணி 26 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் கரோலினா வென்றார். அதேபோல் மற்றொரு ஆட்டத்தில்  செக் குடியரசு வீராங்கனை  பார்போரா  கிரெஜ்சிகோவா(2வது ரேங்க்), எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டவெயிட்(8வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.

டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியில் 2016ம் ஆண்டுக்கு பிறகு  ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுக்கு தகுதிப் பெற்றுள்ள பார்போரா எளிதில் அனெட்டை வீழ்த்துவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்  அனெட் ஒரு மணி 15 நிமிடங்களில் 6-3, 6-4 என நேர் செட்களில்  பார்போராவை எளிதில் வீழ்த்தினார்.

லின்ஸ் ஓபன் டென்னிஸ்

ஆஸ்திரியாவில் நடைபெறும் லின்ஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்  அரையிறுதி ஆட்டங்களில் ஒரே நாடுகளை சேர்ந்த சக வீராங்கனைகள் களம் காண உள்ளனர். முதல் அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனைகள் அலிசன் ரிஸ்க்(73வது ரேங்க்), டேனியலி கொலின்ஸ்(29வது ரேங்க்) ஆகியோரும், 2வது அரையிறுதியில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலேப்(22வது ரேங்க்), ஜாக்குலின் கிறிஸ்டியன்(100வது ரேங்க்) ஆகியோரும் மோத உள்ளனர்.

Related Stories:

More