காதலனை விரைவில் அறிவிப்பதாக நடிகை கங்கனா ரனவத் தகவல்

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் நடிப்பு தவிர படம் இயக்குவது, தயாரிப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி சர்ச்சைக்குரிய பதிவுகளை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது அவரது வழக்கம். வீடியோக்களில் அவர் பேசி வெளியிடும் பல கருத்துகள் விவாதப் பொருளாக மாறி, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்ட கங்கனா ரனவத், பிறகு அளித்த பேட்டியில் தன் எதிர்கால வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், விரைவில் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதுபற்றி கேட்டபோது, ‘விரைவில் தெரியும்’ என்று பதிலளித்துள்ளார்.

Related Stories: