கேரளாவில் தொடரும் கனமழை: எரிமேலியில் நிலச்சரிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு பத்தனம்திட்டா, கோட்டயம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், சபரிமலை அருகே உள்ள எரிமேலி, கீரித்தோடு பகுதிகளில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. சத்தம் கேட்டதும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உடனே அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கி படுகாயமடைந்தார்.

அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 2 ஆட்டோக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 9 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நிலச்சரிவால் இப்பகுதியில் போக்குவரத்து பாதித்துள்ளது. இதேபோல், கணமலை புறவழிச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

More