×

நடிகை கங்கனா சர்ச்சை பேச்சு: உண்மையான சுதந்திரம் 2014-ல் தான் கிடைத்தது

புதுடெல்லி:  ‘கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது,’ என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சனங்களில் சிக்குவார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ‘1947ல் கிடைத்தது உண்மையான  சுதந்திரம் கிடையாது. அது வெறும் பிச்சைதான், 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது,’ என்றார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வருண் காந்தி ஆவேசம்: பாஜ எம்பி.யான வருண் காந்தி தனது டிவிட்டரில், ‘இது தேச விரோத செயல். இதனை இப்படிதான் அழைக்க வேண்டும். இல்லையென்றால் அது நாட்டின் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய அனைவருக்கும் செய்யும் துரோகமாகும். இதனை பைத்தியக்காரதனம் என்பதா அல்லது தேச துரோகம் என்பதா?,’ என கூறியுள்ளார். மேலும், கங்கனா பேசும் 24 வினாடி வீடியோவையும் இதனுடன் இணைத்துள்ளார்.

Tags : Kangana Ranaut , Actress Kangana, controversial speech, true freedom
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்