ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திக்குள்ளாகின்றனர். குறிப்பாக, கடந்த 7ம் தேதி பல இடங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதையடுத்து மின்சார ரயில்கள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் முன்னறிவிப்பின்றி ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும்  சிரமமத்திக்குள்ளனார்கள். இந்நிலையில் சென்னையில் இன்று மீண்டும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தயைடுத்து மின்சார ரயில் சேவைகள் பாதியாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட  அறிக்கை: தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி  மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

More