×

சென்னையில் கனமழை காரணமாக 45 இடங்களில் மரங்கள் சாய்ந்தன: அகற்றும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. மேலும், நேற்று முன்தினம் இரவு முதல் கன மழையானது அதிக காற்றுடன் பெய்ததால் பல இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்தன. மாநகராட்சி சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரங்களை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களும், 15 மண்டலங்களில் உள்ள கையினால் இயக்கும் 371 மர அறுவை இயந்திரங்களும் ஏற்கனவே அந்தந்த வார்டுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழை காரணமாக 45 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி, காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, 31 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவ ரத்திற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும் அந்த இடங்களிலிருந்து மரக்கிளைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மீதமுள்ள பகுதிகளில் தொடர்ந்து மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Tags : Chennai , Trees fell in 45 places due to heavy rains in Chennai: Intensity of removal work
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...