புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியைக் கடந்த மாதம் 22ஆம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்த மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்தது. தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவு நீட்டிக்க படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குளறுபடிகளைச் சரிசெய்யும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நிரந்தரமாக தள்ளிப்போட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பை நடத்தி தான் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியும் என அறிவித்துள்ளது.

Related Stories:

More