×

கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை தொடர்வதால் மேலும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்க இருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. பல்வேறு சாலைகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு முதல்வர் அறிவுறுத்தினார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி, நிவாரண உதவிகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் பிற்பகல் 3 மணி அளவில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கரையை கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ, புதுவைக்கு 150 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Tags : Chennai ,Kanchi ,Sedelbut , School, college, holidays
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...