×

திருவாரூரில் கொட்டி தீர்த்த கனமழையால் விளைநிலங்களில் வலைபோட்டு மீன் பிடிக்கும் விவசாயிகள்..!!

திருவாரூர்: டெல்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக விவசாய நிலங்கள் பல லட்சம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.  விவசாய நிலங்களில் வலைபோட்டு மீன் பிடிக்கும் அவலமும் அரங்கேறியுள்ளது. எந்த ஒரு இயற்கை சீற்றமாழினும் அதில் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொக்கலாடி என்ற கிராமத்தில் மட்டும் 1,500 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது.  இப்பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வலை போட்டு மீன் பிடிக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இளம் தளிர்கள் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்ததாக பல செய்திகள் வெளியாகின.

ஆனால் கொக்கலாடி கிராமத்தில் சுமார் 50, 60 நாட்களான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 22,000 முதல் 30,000 வரை செலவு செய்துள்ளனர். நகைகளை அடமானம் வைத்து பயிர் செய்ததாகவும், தற்போது அவை நீரில் மூழ்கி நாசமடைந்துவிட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் விளைநிலங்களுக்குள் அதிகளவில் தண்ணீர் புகுந்ததால் மீன்பிடிக்கக்கூடிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


Tags : Tiruwarur , Thiruvarur, arable land, fish, farmers
× RELATED திருவாரூர் அருகே சோத்தகுடியில் ரத்த...