×

டெல்லியில் ஆளுநர்கள், துணை ஆளுநர்களின் 51வது மாநாடு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது...!

டெல்லி: டெல்லியில் ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் 51-வது மாநாடு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதற்கு முன்னர், கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஆவது மாநாடு நடந்தது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இந்த மாநாடு நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் கவர்னர்கள், துணைநிலை கவர்னர்களுக்கான 51 ஆவது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் 11ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் நான்காவது மாநாடு இது.

இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். கொரோனா பரவல் மற்றும் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலம் சட்ட மற்றும் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பற்றி மாநாட்டில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: 2 வருட இடைவெளிக்குப் பிறகு இன்று சந்திக்கிறோம். நம் நாட்டின் அனைத்து கொரோனா போராளிகளும் இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடி அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். மேலும், இன்று 108 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், பணி தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags : 51st Conference of Governors and Deputy Governors ,Delhi ,President ,Ramnath Govind , Delhi, Governors, Conference, commenced
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...