தீவு போல காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழை; 20 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: 11 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தியாகராயநகர். மேற்று மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விடிய விடிய தொடரும் கனமழை, நேற்று மாடில 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை குறித்து வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எண்ணுரில் 17.5 செ.மீ மழை பதிவு செய்யப்பட்டள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழையும், எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 45கீ.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்கு வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடிய, விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையில் 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நண்பகல் 1 மணி வரை பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. வடதமிழ்நாடு கடலோர பகுதிகளில் 40 கி.மீ. முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவித்துள்ளது. கடலூர் ,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமறை:

கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தொடர்கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு , நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், மயிலாடுதுறை கடலூர் ,சேலம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, ஈரோடு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள் மூடல்:

விடிய, விடிய கனமழை பெய்து வருவதால் சென்னையில் 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. வியாசர்பாடி, கணேசபுரம், அஜாக்ஸ், கெங்குரெட்டி, மேட்லி, துரைசாமி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. பழவந்தாங்கல், தாம்பரம், அரங்கநாதன், வில்லிவாக்கம், காக்கன் சுரங்கப்பாதைகளும் மூடப்ட்டுள்ளன. சென்னையில் சுரங்ப்பாதைகளின் வழியே செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

Related Stories:

More