×

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5 வகையான தொழிற்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை: கலெக்டர் விஜயா ராணி அறிவிப்பு

சென்னை: கிண்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 5 வகையான தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி பேஷன் டிசைன் டெக்னாலஜி, ஸ்டெனோகிராபர் மற்றும் செகரெடரியல் அசிஸ்டன்ட் (ஆங்கிலம்), கம்பியூட்டர் எய்டட் எம்பிராய்டரி மற்றும் டிசைனிங் உள்ளிட்ட 5 வகையான தொழிற்பிரிவுகளுக்கு வருகிற 18ம் தேதி நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விரும்பமுள்ள மாணவிகள் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு இல்லை.

மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகவேண்டும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவுடன், முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளதால் மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-22510001,  9499055652  தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இதேபோல், அம்பத்தூரில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 18ம் தேதி வரை (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதள வாயிலாக நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி கம்மியர் கருவிகள் (2 ஆண்டுகள்), கோபா (1 ஆண்டு), செயலகம் பயிற்சி (1 வருடம்), கட்டிடப்பட வரைவாளர் (2 ஆண்டு), தையல் தொழில்நுட்பம் (1 ஆண்டு) உள்ளிட்ட 5 வகையான தொழிற்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

8,10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.500, இலவச பஸ் பாஸ், சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், இரு செட் சீருடை மற்றும் சிறந்த தொழில்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Vijaya Rani , Government Vocational Training Center, Vocational Division, Student Admission, Collector Vijaya Rani
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...