அண்ணா சாலையில் விபத்து 2 கார்கள் மோதல் : கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை அண்ணா சாலை அதிகம் வாகனங்கள் செல்லக் கூடிய பகுதிகள் என்பதால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும். இந்நிலையில், நேற்று மதியம் மவுண்ட் ரோடு பகுதியில் கார் வேகமாக சைதாப்பேட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது ஸ்ெபன்சர் அருகே அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நிறுத்தத்தில் சிவப்பு விளக்கு எரிவதை கவனிக்காத கார் ஓட்டுநர் பார்த்து திடீரென பிரேக் பிடித்துள்ளார். ஆனால் மழை பெய்து கொண்டு இருந்தால் அவரால் காரை நிறுத்த முடியவில்லை.

இதனால் சிக்னலில் நின்று கொண்டு இருந்த மற்றொரு காரில் மோதி நின்றது. இதையடுத்து அந்த காருக்கு பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பலத்த சேதமடைந்தன. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விபத்து காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: