×

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக பால் விநியோகம் செய்ய குழு அமைப்பு: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

சென்னை: வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பால் விநியோகம் செய்ய குழு அமைக்க வேண்டும். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், ‘‘வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சங்கங்களுக்கு நேரடியாக சென்று பால் கொள்முதல் பணிகள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். கால்நடை மருத்துவர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கறவை மாடுகளை கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பால் இருப்பில் வைக்கப்பட்டுள்ள இடத்தின் விவரங்கள், பாலகங்களின் விவரங்கள் மற்றும் பாலானது நேரடியாக விநியோகம் செய்யப்படின் அதன் விவரங்கள் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Tags : Minister ,S.M.Nasser , Floods, Milk Distribution, Minister, S.M.Nasser
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...