நீதித்துறை பணி நியமனங்களில் இடைதரகர்களை நம்ப வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நீதிமன்றங்களில் ஆட்சேர்ப்பு விஷயத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் எச்சரித்துள்ளார். உயர் நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் உள்பட பல்வேறு நீதிமன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. இந்த பணி நியமனம் பெற்றுத் தருவதாக கூறி சிலர் வேலை தேடுபவர்களிடம் பெருந்தொகை வாங்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.எனவே, பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பான புகாரை காவல்துறை குற்றப்பிரிவு துறைக்கு நேரடியாக தெரிவிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More