கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்லைன் வெடித்தது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்ஆக்கிஜன் பைப்லைனில் நேற்று காலை கசிவு ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டில் இருந்த நோயாளிகள், பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கசிவு ஏற்பட்ட பைப்லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவசர சிகிச்சை பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: