கொடநாடு கொலை வழக்கு தனபால், ரமேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அரசு வக்கீல்கள் சென்னையில் உள்ள நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து இருவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

More