ஒரே நாடு; ஒரே சட்டம் குழுவில் 3 தமிழ் பிரதிநிதி: இலங்கை அதிபர் உத்தரவு

கொழும்பு: இலங்கையில் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற கொள்கையை அமல்படுத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இதற்கான நகல் சட்டங்களை தயாரிக்க, கடந்த மாதம் 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதில் பெரும்பான்மை சிங்களர்களும், சிறுபான்மை முஸ்லிம்களும் மட்டுமே இடம் பெற்றனர். இதற்கு, தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த குழுவில் தமிழ் பிரதிநிதிகள் 3 பேரை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நியமித்தார். ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பத்குணராஜா, இயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ராமலிங்கம் சக்ரவர்த்தி, யாழ்பாண மேயராக இருந்துள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி 22ம் தேதிக்குள் தனது நகல் சட்ட அறிக்கையை வழங்கும்படி இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: