×

ஒலிம்பிக்சில் டி10 டு பிளெஸ்ஸி கணிப்பு

அபுதாபி: ஒலிம்பிக் போட்டியில் 10 ஓவர் அடிப்படையிலான டி10 வகை கிரிக்கெட் இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக, தென் ஆப்ரிக்க அணி முன்னாள் கேப்டன் டு பிளெஸ்ஸி கூறியுள்ளார். அபுதாபி டி10 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக விளையாட உள்ள டு பிளெஸ்ஸி நேற்று கூறியதாவது: நான் இது வரை டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளேன். 10 ஓவர்கள் அடிப்படையிலான டி10 கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாட உள்ளது மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

என்னைப் போன்ற வீரர்களுக்கு டி10 கிரிக்கெட் மீது நிச்சயம் ஈர்ப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து டி10 தொடர்களில் விளையாட ஆர்வமாக உள்ளேன். இந்த வகை போட்டிகளுக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற வேண்டும் என்றால் அது டி10 வகை போட்டியாகவே இருக்கும். மிக விரைவில் ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களுக்கும் இது நிச்சயம் பிடிக்கும். இவ்வாறு டு பிளெஸ்ஸி கூறியுள்ளார்.

Tags : T10 du Plessis ,Olympics , T10 du Plessis prediction at the Olympics
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...