×

விஜய், அஜித் படங்களில் பணியாற்றிய நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணம்

சென்னை: விஜய், அஜித் குமார், மம்முட்டி, மோகன்லால் உள்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய கூல் ஜெயந்த், நேற்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். நடன இயக்குனர்கள் ராஜூ சுந்தரம், பிரபுதேவா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி, பிறகு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் கூல் ஜெயந்த் (51). கடந்த சில மாதங்களாக புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று முன்தினம் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், நேற்று காலை 7 மணியளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கூல் ஜெயந்த் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்களும், தமிழ் திரையுலகினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜய் நடித்த லவ் டுடே, ப்ரண்ட்ஸ், குஷி, ப்ரியமானவளே, அஜித் குமார் நடித்த ஆசை, வாலி, ஜனா, ஜெயம் ரவி நடித்த பேராண்மை உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு கூல் ஜெயந்த் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.  கடைசியாக அவர் பணியாற்றிய படம், லாபம். மரணம் அடைந்த கூல் ஜெயந்துக்கு மனைவி சுஜி, மகள் செல்சியா, மகன் ஜோஷ்வா உள்ளனர். நேற்று மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள சர்ச்சில் கூல் ஜெயந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags : Cool Jayant ,Vijay ,Ajith , Cool Jayant, choreographer who worked in Vijay and Ajith films, dies
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...