5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் 5வது ஐஎஸ்சி -ஐஎப்சிசிஐ துப்புரவு விருதுகள் மற்றும் இந்திய துப்புரவு மாநாடு நடைபெற்றது. இதில் ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் 17 சதவீதம் வீடுகள் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பை பெற்றன. ஆனால், கொரொனா தொற்று சூழல் காரணமாக சிக்கல்கள் இருந்த போதிலும் நாங்கள் கூடுதலாக 27 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கி இருக்கிறோம். தற்போது 8.5 கோடி பெண்கள் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளனர். ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

Related Stories:

More