கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய குழு தலைவராக திமுக வேட்பாளர் சுகுணா தேர்வு

கடலூர்: கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய குழு தலைவராக திமுக வேட்பாளர் சுகுணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மறைமுக தேர்தலில் 13 கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று சுகுணா வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஒன்றிய குழு தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தலா 12 ஓட்டுக்கள் பெற்றனர். குலுக்கல் முறையில் தலைவர் தேர்வை ஏற்காததால் மறுதேதி குறிப்பிடாமல் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட்டிருந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 13 கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று சுகுணா வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories:

More