×

காவிரியில் வெள்ளப்பெருக்கு எதிரொலி நெரிஞ்சிப்பேட்டையில் படகு போக்குவரத்து நிறுத்தம்: ஆற்றில் விநாடிக்கு 8,500 கன அடி நீர் வெளியேற்றம்

பவானி: காவிரியில் வெள்ளப்பெருக்கால் நெரிஞ்சிப்பேட்டையில் பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளதால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால், கரையோர பகுதி மக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள அபாயம் நிலவுவதால் பவானி அடுத்துள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் படகுத்துறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. இங்கு, கதவணை நீர்மின்நிலையத்தில் முழுவீச்சில் மின்உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இதனால், நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக பொதுமக்கள் சுற்றி சென்று வருகின்றனர். அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் மீனவர் தெரு, பாரதி வீதி உள்ளிட்ட தாழ்வான ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சின்னப்பள்ளம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் தண்டோரா போட்டு எச்சரிக்கப்பட்டது.


Tags : Echoe ,Gavari , Cauvery, flooding, boat transport, parking
× RELATED தொடர் மழை எதிரொலி: புதுச்சேரியில்...