×

தெப்பக்காடு-தொரப்பள்ளி சாலையில் பள்ளம்: சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அவதி

ஊட்டி: தெப்பக்காடு முதல் கக்கநல்லா சோதனை சாவடி வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில், மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளை விரிவாக்கம் செய்தல், பாலம் கட்டுதல், தடுப்பு சுவர் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், சாலை பழுதடைந்தால் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரையில் உள்ள சாலை முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளது.இச்சாலையில் தற்போது பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சாலை கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்த போதிலும், இச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இச்சாலையில் தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள் வரை செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளங்கள் இருப்பதை அறியாமல் வாகனங்களை இயக்கும் போது, பள்ளங்களில் இறங்கி பழுதாகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளதால், இவ்வழித்தடத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Theppakadu-Thorappalli road , Theppakkadu-Thorappalli, road, ditch, avadi
× RELATED கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா