×

தொடர்ந்து நீடிக்கும் புகை, பனிமூட்டம்!: டெல்லியில் மீண்டும் மோசமான நிலையில் காற்றின் தரம்...மக்கள் பரிதவிப்பு..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக இன்று காற்றின் தரம் மோசமான நிலையில் காணப்பட்டது. டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது அதிகமாக பட்டாசு வெடித்ததால் தொடர்ந்து புகைமூட்டம் நீடித்து வருகிறது. பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்று மாசு அடைந்துள்ளதக கூறப்படுகிறது. இன்று அதிகாலையிலும் வானம் புகைமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் பனிமூட்டம் நீடித்து வருகிறது.

காற்றின் தரத்தை கணக்கிடப் பயன்படும் எ.கியூ.ஐ. முறையில் 100க்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் காற்றின் தரம் மோசம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில்எ.கியூ.ஐ. ஆனது 382 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரிக்கு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். டெல்லியில் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்த நிலையிலும் வயல் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு அதிகரித்ததாக கூறப்படுகிறது. டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் ஆகியவை காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi , Smoke, Delhi, air quality
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...