தமிழ்நாட்டில் பரவலாக பெய்யும் தொடர் மழை!: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 3,954 பாசன ஏரிகள் நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 3,954 பாசன ஏரிகள் நிரம்பின. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

* தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசன ஏரிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 3,954 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின.

* தமிழ்நாட்டில் 2,874 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை கொள்ளளவை எட்டி வேகமாக நிரம்பி வருகின்றன.

* 2,433 பாசன ஏரிகள் முழு கொள்ளளவில் 51 முதல் 75 சதவீதம் வரை எட்டி, நிரம்பி வருகின்றன.

* மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசன ஏரிகளில் இதுவரை 444 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன.

* தென்காசி மாவட்டத்தில் 338 பாசன ஏரிகளும், தஞ்சை மாவட்டத்திலும் 345 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பி மறுகால் பாய்கின்றன.

* விழுப்புரம் 221, திருவண்ணாமலை 297, புதுக்கோட்டை 204, திருவள்ளூர் 200, நெல்லை 192, சேலம் 173, தூத்துக்குடி 85 பாசன ஏரிகளும் நிரம்பி வருகின்றன.

* தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 263 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி  மறுகால் பாய்கின்றன.

Related Stories: