×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம்

கடலூர் : கடலூர் அருகே நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடகடலோர பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.அதே போன்று வங்கக்கடலில் நவம்பர் 13ல் புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம், தெற்கு அந்தமான் கரையோரப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Tags : Cuddalore ,Meteorological Center , வானிலை ஆய்வு மையம்
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...