கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மீண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். திருவாரூர், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் இதுவரை 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாநகராட்சியோடு சேர்ந்து பணியாற்றுகின்றனர். கடலோர மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: