×

மபி. மருத்துவமனையில் தீ 4 பச்சிளம் குழந்தைகள் பலி

போபால்:  மத்தியப் பிரதேச மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் பலியாகினர்.  மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் கமலா நேரு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் குழந்தைகள் சிறப்பு வார்டில் 40 பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினரு க்கு தகவல் தெரிவித்தனர்.

தீ விபத்து காரணமாக அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்கிருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் சிறப்பு வார்டில் இருந்த குழந்தைகளை வேறு இடத்திற்கு மாற்றினர். எனினும், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் பதற்றத்துடன் திரண்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்். மேலும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ தடுப்பு பாதுகாப்பு கருவி
இந்த தீ விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சவுகான், ‘‘ குழந்தைகளை காப்பாற்றுவது அரசின் கடமை. இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகள் நடக்காமல் தடுக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Mubi , Hospital, fire, children, kills
× RELATED தேர்தலை போருடன் ஒப்பிட்டு பேசிய மபி எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்கு