×

தனிமைப்படுத்துதல் கிடையாது: கோவாக்சின் போட்டவர்களுக்கு 22ம் தேதி முதல் இங்கிலாந்து அனுமதி

லண்டன்: கோவாக்சின் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், வரும் 22ம் தேதி முதல் இங்கிலாந்து வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்நாடு அறிவித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சின், இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. இதன் அவசர கால பயன்பாட்டுக்கு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கடந்த மாதம்தான் இந்நாடு அனுமதி அளித்தது.  

இது தொடர்பாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்துக்கு வரும் இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. உலக சுகாதார நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, இங்கிலாந்தின் அனுமதியளிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியல்களில் சேர்க்கப்படுகின்றது. கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பயணிகள் இனி  எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இங்கிலாந்துக்கு வரலாம். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். வரும் 22ம் தேதி மாலை 4 மணி முதல் இந்த தளர்வு அமலுக்கு வருகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kovacs' ,UK , Isolation, Kovacsin, England
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது