குடும்ப பிரச்னையில் தம்பதிக்குள் மோதல் நடிகை பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதி: கணவர் சாம் பாம்பே அதிரடி கைது

மும்பை: பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கும், சினிமா துறையை சேர்ந்த சாம் பாம்பேவுக்கும் கடந்த 2020 ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவர்கள் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டனர். கோவாவுக்கு தேனிலவு பயணமாக சென்றிருந்த பூனம் பாண்டே, திடீரென்று சாம் பாம்பே தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். அந்த அடிப்படையில் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். அடுத்த சில நாட்களில் சாம் பாம்பே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சாம் பாம்பேவுடனான திருமண உறவை முடித்துக்கொள்ளப் போவதாக பூனம் பாண்ேட சொல்லியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாம் பாம்பேவுக்கும், பூனம் பாண்டேவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது பூனம் பாண்டே கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசில் பூனம் பாண்டே புகார் அளித்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மும்பை போலீசார் சாம் பாம்பேவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூனம் பாண்டே, டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: