×

பெட்ரோல், டீசலில் குவித்த ரூ.4 லட்சம் கோடியை பிரித்து தர வேண்டும்: மம்தா புதிய கோரிக்கை

கொல்கத்தா: ‘பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தியது மூலம் கிடைத்துள்ள ரூ.4 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா நேற்று பேசியதாவது: அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசானது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலமாக பெறப்பட்ட வரியின் மூலமாக ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் கோடியை திரட்டியுள்ளது.

ஆனால், தற்போது இவற்றுக்கான வாட் வரியையும் மாநில அரசுகள் குறைக்க  வேண்டும் என்று கூறி வருகிறது. மாநிலங்கள் எங்கிருந்து பணத்தை பெறும்? ஒன்றிய அரசு திரட்டிய ரூ.4 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும். எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அப்போது எல்லாம். பெட்ரோல், டீசல் விலைகளை ஒன்றிய அரசு குறைக்கிறது. தேர்தல் முடிந்து விட்டால் மீண்டும் விலையை உயர்த்தி விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Mamta , Petrol, Diesel, Mamta, New Demand
× RELATED மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி,...