×

மாயை, கன்மம், ஆணவத்தை அழித்தார் திருச்செந்தூரில் 2வது ஆண்டாக பக்தர்களின்றி சூரசம்ஹாரம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை 2வது ஆண்டாக பக்தர்களின்றி நடந்தது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாக சாலைக்கு எழுந்தருளல் நடந்தது. மாலை 4.45 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது.

5 மணிக்கு கோயில் முன்புறமுள்ள கடற்கரையில் சூரனை வதம் செய்ய  சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். 5.15 மணிக்கு முதலில் மாயை எனும் கஜமுகா சூரனையும், 5.22க்கு கன்மம் எனும் சிங்கமுகாசூரன், 5.30க்கு ஆணவம் எனும் சூரபதுமனையும் 5.44க்கு மாமரமாக உருமாறி நின்ற சூரனையும் இரு கூறாக்கி மயிலை வாகனமாகவும் சேவலை கொடியாக தனதாக்கி கொண்டார். தொடர்ந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு ஜெயந்திநாதருக்கு சாயாபிஷேகம் நடந்தது. இன்று (10ம்தேதி) மாலை 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் கோயிலில் நடக்கிறது.

பின்னர் இரவு சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வுகளில் பங்கேற்க 2ம் ஆண்டாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்ைல. திருவிழாவையொட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Khanma ,Goddess ,Thirichthur, Surasamharam , Illusion, Kanmam, Arrogance, Thiruchendur, Surasamaram, Police Security
× RELATED பள்ளூர் வாராஹி