×

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்த பணியில் ஈடுபட வேண்டும்: காங்கிரசாருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்களை நீக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் மனு அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 13.11.2021 சனிக்கிழமை, 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை, 27.11.2021 சனிக்கிழமை, 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் பெயர்ந்த வாக்காளர்களும், 1.1.2022 அன்று 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் தங்களது பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்வதற்குமான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும்.

 இதனடிப்படையில், வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், மேலும் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மாவட்ட தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தங்களை முழுமையாக இப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.
 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து, தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : KS Alagiri ,Congress , Voter List, Special Camp, New Voter, KS Alagiri
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...