கொரோனாவால் பாதித்த கி.வீரமணி குணமடைய முத்தரசன் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது வாழ்விணையர் மோகனாவும் கொரோனா நோய் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்று சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தி மிகுந்த கவலையளித்தது. தற்போது மருத்துவச் சிகிச்சையில் உடல்நலம் முன்னேற்றம் கண்டு வருகிறது, விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற தகவல் ஆறுதல் அளிக்கிறது. சிகிச்சை பெற்று வரும் கி.வீரமணி, அவரது வாழ்விணையர் மோகனா இருவரும் பரிபூரணமாக குணமடைந்து, இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: