கனிமொழி எம்.பி. வேண்டுகோள் மழையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவி

சென்னை:திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10(இன்று), 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணியினர், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளைச்செய்யத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மகளிரணியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நிவாரணப் பணிகளின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: