பேரிடர் காலங்களில் ஏற்படும் நோயை தடுக்கும் வகையில் ரூ.160 கோடி மதிப்பிலான மருந்துகள் தயாராக உள்ளது: மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  மழை தொடர் ந்து பெ ய்து வந்தாலும், சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் ஏற்படும் நோயை தடுக்கும் வகையில் அடுத்த மூன்று மாத காலத்துக்கு தேவையான ரூ.160 கோடி மதிப்பீட்டிலான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.

தற்போது சென்னையில் 205 முகாம்களில் 8 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,500 மருத்துவ முகாம்கள் மூலம் 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் மருத்துவ முகாம்களை 500 ஆக அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால், கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More