×

ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்துவிட்டது நுங்கம்பாக்கத்தில் 6ம்தேதி இரவு மட்டும் 145 மி.மீ. மழை கொட்டியது

சென்னை: சென்னையில் ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை, ஒரே நாள் இரவில் பெய்துள்ளது. அதாவது, ஒரு ஆண்டுக்கான சராசரி அளவை விட நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீ., மழை பெய்துள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளிலும் சராசரியை விட அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 6ம்தேதி இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் 23 செ.மீ., மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை கடந்த சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மட்டும் 207 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2015க்கு பின் பெய்த மிக அதிக மழை அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 சென்னையில் அடையாறு, போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி, கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும், கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை, மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழை பதிவானது. கடந்த சனிக்கிழமை மட்டும் சென்னை வில்லிவாக்கத்தில் 162 மிமீ மழை பெய்தது. அதேபோன்று நுங்கம்பாக்கத்தில் 145 மிமீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. புழல் பகுதியில் 111 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் பெய்ய வேண்டிய மொத்த மழை சராசரி அளவு ஏற்கனவே பெய்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் சென்னை நுங்கம்பாக்கத்தில் சராசரியாக 140 மி.மீட்டர் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின்போது அதிக மழை பெறும் அல்லது வடகிழக்கு பருவமழையின்போது அதிக மழைபெறும். இதனால் மழை அளவு 140 மி.மீட்டரை தாண்டுவது அதிசயம். ஆனால் இந்த முறை ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் 141 மி.மீட்டர் மழை பதிவாகி விட்டது. வடகிழக்கு பருவமழை இப்போதுதான் தொடங்கி உள்ளது. இன்னும் பெரிதாக புயல் எதுவும் வீசவில்லை. அதேபோல் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 45 நாட்களுக்கும் மேலாக உள்ளது. ஆனால் அதற்கு உள்ளாகவே நுங்கம்பாக்கத்தில் சராசரி மழை பெய்துவிட்டது.

 இதனால் மீதம் உள்ள நாட்களில் மேலும் மழை அதிகம் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டியில் ஆண்டு சராசரி மழை அளவு 138 மி.மீ., என்ற நிலையில் அங்கு ஏற்கனவே 132 மி.மீ., பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கம் மட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளிலும் இந்த ஆண்டு சராசரியை விட அதிக மழை பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Nungambakkam , Rain, Nungambakkam, Floods,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...