×

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மேகாலயாவுக்கு இடமாற்றம்; உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை.!

சென்னை: தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஏ.பி.சாஹி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற சஞ்ஜீப் பானர்ஜி, முதல் நாளிலேயே பணியைத் தொடங்கினார்.

11 மாதங்களில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.இந்த நிலையில் கொலிஜியம் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதுபோலவே, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிடம் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai High Court ,Justice ,Sanjeeb Banerjee Meghalaya ,Supreme Court , Chennai High Court Chief Justice Sanjeeb Banerjee transferred to Meghalaya; Supreme Court Collegium Recommendation.!
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...