உ.பி.யில் போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அமைச்சர் மகன் துப்பாக்கியால் சுட்டது தடயவியல் ஆய்வில் உறுதி

லக்கிம்பூர்: உ.பி.யில் போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அமைச்சர் மகன் துப்பாக்கியால் சுட்டது தடயவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளது. விவசாயிகள் மீது அமைச்சர் மகனின் நண்பரும் துப்பாக்கியால் சுட்டது தடயவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளது. அக்டோபர் 3ம் தேதி உ.பி.யின் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளில் 4 பேரை பாஜகவினர் கொன்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது ஏற்றிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ், அவரது நண்பர் அங்கித்தாஸூம் இருந்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ரா துப்பாக்கியால் விவசாயிகளை நோக்கி சுட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆஷிஷ் மற்றும் அங்கித்தாஸ் உள்ளிட்டோரை கைது செய்த போலீஸ் அவர்களது கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியது. கைத்துப்பாக்கிகளை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், 2 பேரும் துப்பாக்கியால் சுட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர். விவசாயிகள் குற்றச்சாட்டை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியதால் ஆஷிஷ் மீதான வழக்கின் பிடி இறுகி உள்ளது. விவசாயிகள் மீது காரை ஏற்றியதை வீடியோ பதிவு செய்த செய்தியாளர் ஒருவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றவர்களில் 3 பேர் ஆத்திரமடைந்த நபர்களால் அடித்து கொல்லப்பட்டனர்.

Related Stories:

More