சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு!: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்..!!

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை 2வது நாளாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய அதிகனமழையால், பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடின. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், எழில் நகர் உள்ளிட்ட இடங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து திருவெற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும் வடசென்னையில் மழை, வெள்ளம் தேங்கிய இடங்களை அவர் நேரில் பார்வையிட்டார்.

Related Stories:

More