காரைக்குடி, மதுரை சிறப்பு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற இருந்த பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பகுதி தூரம் ரத்து செய்யப்பட்ட காரைக்குடி, மதுரை சிறப்பு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் வழக்கமான வழியில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

* காரைக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ( எண்: 02606) நாளை வழக்கம் போல் எழும்பூர் வரை இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர் - மதுரை சிறப்பு ரயிலும் ( எண்: 02635) நாளை வழக்கம் போல் எழும்பூரில் இருந்து புறப்படும்.

* புதுவை - புதுடெல்லி ( எண்: 04071 ) சிறப்பு ரயிலும் நாளை வழக்கமான பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* புதுவை - புதுடெல்லி சிறப்பு ரயில் விழுப்புரம் - காட்பாடி, அரக்கோணம் வழியே இயக்கப்படும் என்ற முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத ரயில் ஞாயிறு அன்றும் பாலக்காடு - பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் சனிக்கிழமை அன்றும் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: