நிழற்குடை அமைத்ததில் பல லட்சம் முறைகேடு!: மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கோவை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு..!!

கோவை: கோவை அருகே நிழற்குடை அமைத்ததில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுத்துக்குட்பட்ட சாலைகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, தொகுதி நிதியில் நிழற்குடை அமைத்துள்ளார். அதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்சஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பணம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், நிழற்குடை அமைத்ததில் முறைகேடு செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரை உரிய விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். எஸ்.பி. வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: