மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காலை 6 மணிக்கு அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் முதற்கட்டமாக 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டது; தற்போது 2ம் கட்டமாக 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியதை அடுத்து வினாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். என்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. செக்கானுர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கால் மேடு, உள்ளிட்ட கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கியது.

Related Stories:

More