தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆபத்தா?

மும்பை: மும்பை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர், போலீசுக்கு போன் செய்தார். அப்போது, நேற்று பகல் ஒரு மணியளவில் 2 மர்ம நபர்கள் தனது டாக்சியில் ஏறினர். அவர்கள் கையில் பெரிய பை வைத்திருந்தார்கள். மேலும் அவர்கள் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டின் முகவரி பற்றி திரும்பத் திரும்ப வலியுறுத்தி கேட்டனர். இதனால் அவர்கள் இருவர் மீதும் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது, என டாக்சி டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டாக்சி டிரைவர் ஆசாத் மைதானிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

Related Stories:

More